த வெ.க அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
த வெ.க அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 100 கிலோ அரிசி 100 ரூபாய் தொட்டாச்சி என முழக்கம் எழுப்பியது நகைப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு த.வெ.க. அரசை கண்டித்து
தஞ்சை வடக்கு மத்திய தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரமணி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்களில்
பயம் இல்லையா பயம் இல்லையா குற்றவாளிகளுக்கு பயம் இல்லையா
என்னாச்சி என்னாச்சி அரிசி விலை என்னாச்சி என்ன முழக்கமிட்டவர்கள்
100 கிலோ அரிசி 100 ரூபாய் தொட்டாச்சி என முழக்கமிட்டனர்.
இந்த முழக்கம் பொது மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியது.

