in

முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம்

 

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வென்று சாதனை படைத்த பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-மாணவிகள்..

தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த தங்களது பள்ளிக்கு மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு மாணவிகள் கோரிக்கை.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பையான கோகோ போட்டியில்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11-மாணவிகள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், முதல்வர் கோப்பையும் வென்றனர்.

அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் அனைவரையும் பள்ளியின் சார்பிலும், சமூக அமைப்புகள் சார்பிலும் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பாபநாசம் அண்ணா சிலையிலிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கி பாராட்டினர்..

மேலும் கோகோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவி கூறும் போது, தங்கள் பள்ளியில் மைதானம் இல்லாததால் வெளி மைதானத்திற்கு சென்று பயிற்சி பெற்றதாகவும், தங்கள் பள்ளிக்கு மைதானம் அமைத்துக் கொடுத்தால் மாநில அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும் எனவே தங்கள் பள்ளிக்கு தமிழக அரசு உடனடியாக மைதானம் அமைத்து தர வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..

What do you think?

டெல்டா பகுதியை படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்

த வெ.க அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்