in

 திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழா


Watch – YouTube Click

 திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழா

 

புதுச்சேரி கூனிச்சம்பட்டு திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரதத்தில் பாண்டவர்களின் 18 நாள் போரை குறிக்கும் வகையில் நடைபெற்ற பிரமோற்சவ தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் கோயில் சித்திரை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு பஞ்சபாண்டவர்களின் 18 நாள் போரை குறிக்கும் வகையில் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து அம்மன் அர்ஜுனனை, கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கொக்கு மலைக்குச் சென்று பொங்கலிட்டு ஊர் பொதுமக்கள் அம்மன் அர்ஜுனனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது .

மேலும் எல்லைப் பகுதிகளில் காப்பு கட்டி நள்ளிரவு சுவாமிகள் கோயிலை வந்து அடைந்தது .தொடர்ந்து காலையிலும் மாலையிலும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியும், காலையில் போர் மன்னன் வீதி உலாவும் இரவில் மகாபாரத சண்டையை குறிக்கும் வகையில் தெருக்கூத்து நடைபெற்றது

முக்கிய விழாவான அம்மன் அர்ஜுனன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், மாலையில் முத்துப்பல்லத்தில் திருமண கோலத்தில் அம்மன் அர்ஜுனன் வீதி உலாவும் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று பஞ்சபாண்டவர்களின் படுகள நிகழ்ச்சியும் ,மாலையில் பக்தர்கள் தீ மிதிக்கும் தீமிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் அலங்கரிக்கப்பட்ட அம்மனை முத்து பல்லடக்கல் தூக்கி வழிபாடு செய்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழு செய்திருக்க ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அர்ஜுனனின் அருளை பெற்று சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆள்மாறாட்டம் செய்த இரண்டு பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதித்த நீதிபதி

தூய்மை பணியாளர்ளுக்கு உணவு அளித்து மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்