in

ஆள்மாறாட்டம் செய்த இரண்டு பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதித்த நீதிபதி


Watch – YouTube Click

ஆள்மாறாட்டம் செய்த இரண்டு பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதித்த நீதிபதி

 

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்றனர்.

அப்போது காரை வழிமறித்த நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த போலீசார் மீது சாராயம் கடத்தி வந்த கும்பல் காரை விட்டு மோதியது உடன் வேகமாக தப்பி சென்றனர்.

அவர்களை மடக்கிப் பிடிக்கும் வகையில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் காரை துரத்தி சென்ற தலைமை காவலர் ரவிச்சந்திரன் மீது கொடூரமாக காரை ஏற்றினர். இதில் படுகாயம் அடைந்த தலைமை காவலர் ரவிச்சந்திரன் மார்பு பகுதியில் எலும்புகள் உடைந்து மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இந்த கொலை வழக்குத்தொடர்பாக மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன் சங்கர் ராமமூர்த்தி திருவிடைமருதூர் புளியம்பட்டியை சேர்ந்த கருணாகரன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சாராய விற்பனை செய்த கலைச்செல்வனையும் கருணாகரனையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள் மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஜராகினர் இவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

21 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலரை கொலை செய்ததால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் வாதிட்டார்.

குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு விபரங்களை இன்று வெளியிட்டார். கொலை குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் குற்றவாளிகளை காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்த செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது

 திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழா