in

ரசிகரை மை கால் அடித்து தாக்கிய பிரபல சினிமா பாடகர்


Watch – YouTube Click

ரசிகரை மை கால் அடித்து தாக்கிய பிரபல சினிமா பாடகர்

ரசிகரை மை கால் அடித்து தாக்கிய பிரபல சினிமா பாடகர்.
பிரபல பாடகரான உதித் நாராயணன் ஹிந்தியில் ஏராளமான பாடல்கள் பாடியிருந்தாலும் தமிழில் இவர் பாடிய குலுவாலிலே முத்து வந்தல்லோ, போன்ற ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

இவரைப்போலவே இவரின் மகன் ஆதித்ய நாராயணனும் பிரபல பாடகராக உள்ளார் இவர் சென்ற வாரம் சத்தீஸ்கர் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆதித்ய நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது அந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் பங்கு பெற்றனர் ஆதித்யநாராயணன் ஷாருக்கான் நடித்த டான் படத்தில் இருந்து ஆஜ் கா ராத் என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தபோது சந்தோஷம் மிகுதியான ரசிகர் ஒருவர் ஆதித்யாவின் கால்களை தொட்டார் இதனால் கோபம் அடைந்த ஆதித்யா அந்த ரசிகரை கையில் இருந்த மைக்கால் தலையில் அடித்ததோடு அவரின் கைபேசியை வலுகட்டாயமாக பிடுங்கி கூட்டத்தினர் மேல் வீசி எறிந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இவரின் இந்த முரட்டு செயலுக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவர் ரசிகரை தாக்கி போனை பிடிங்கிய அந்த காட்சி வீடியோவாக தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் என்னதான் பிரபல பாடகராக இருந்தாலும் இப்படியா பொது நிகழ்ச்சியில் நடந்து கொள்வது என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

நான் கடன் வாங்காத நாளும் இல்லை கடன் கேட்காத மனிதர்களும் இல்லை… ஆர் ஜே பாலாஜியின் கடந்த காலம்