in

செங்கழுநீர் அம்மன் இந்திர விமானத்தில் வீதி உலா, 200 நடன கலைஞர்கள் பக்தி நடனம்


Watch – YouTube Click

செங்கழுநீர் அம்மன் இந்திர விமானத்தில் வீதி உலா, 200 நடன கலைஞர்கள் பக்தி நடனம்

 

செங்கழுநீர் அம்மன் இந்திர விமானத்தில் வீதி உலா. 200 நடன கலைஞர்கள் பக்தி நடனம் ஆடி அம்மனை வரவேற்றனர்.

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் வீற்றிருக்கும் செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் கோவிலில் 110 ஆம் ஆண்டு செடல் மற்றும் தேரோட்டம் திருவிழா வரும் மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா 2 ஆம் நாள் உபயம் வடக்கு வீதி குடும்பத்தினர் சார்பில் நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகமும் தீபாரதம் நடைபெற்றது ஜோடிக்கப்பட்ட அம்மன் வீதி உலா புறப்பட்டது அப்பொழுது அம்மனை வரவேற்று பக்தி குழு நடனம் நடந்தது. இதில் ஒரே இடத்தில் 200 பேர் பக்தி நடனம் ஆடினர்.

அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் செங்கழுநீர் அம்மன் இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடனம் ஆடிய அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்…


Watch – YouTube Click

What do you think?

 நீர், மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

ஐபிஎல் தொடரில் இன்றைய 51 வது போட்டியில் குஜராத் பெங்களூர் இன்று மோதல்