in

காங்கிரஸ் வேட்பாளர் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை


Watch – YouTube Click

காங்கிரஸ் வேட்பாளர் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை

 

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

தற்போது அவர் காரைக்காலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புதுச்சேரி இளங்கோ நகரில் வசிக்கும் அவரது சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று நன்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டு இரவு 8 மணி வரை சோதனை செய்தனர்.

சென்னையில் இருந்து வந்த ஏழு பேர் கொண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் இரு பைகள் முழுவதும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி கொண்டு சென்றனர்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் ரவிக்குமார் வீடு மற்றும் அலுவலகத்தில் இதே குழுவினர் சோதனை ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

வெத்தலை, பாக்கு, வாழைப்பழத்தை கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மோடி திண்டுக்கல் ஐ லியோனி சாடல்