in

அண்ணனுக்காக வாக்கு கேட்டு வந்த தம்பி சிலம்பம் சுற்றி அசத்திய மூதாட்டி


Watch – YouTube Click

அண்ணனுக்காக வாக்கு கேட்டு வந்த தம்பி சிலம்பம் சுற்றி அசத்திய மூதாட்டி

 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக அவரது தம்பி சண்முக பாண்டியன் சாத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த சண்முகபாண்டியனுக்கு அதிமுகவின் மகளிரணி நிர்வாகியான சிலம்பம் மாரியம்மாள் விசில் அடுத்தும் தேமுதிக கட்சி கொடியுடன் கொண்ட பிளாஸ்டிக் குழாயை வைத்து சிலம்பம் சுத்தி அசத்தினார்.

இதையடுத்து அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்க வந்த சண்முகபாண்டியனுக்கு போதிய வரவேற்பு இல்லை அதிமுக, தேமுதிக கட்சி நிர்வாகிகள் மட்டுமே இருந்ததால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் தெற்குபட்டியில் பேசிய சண்முகபாண்டியன் என் தந்தைக்கு எவ்வாறு ஆதரவு கொடுத்தீர்களோ அதே போல் அவரது மறு உருவமாக உள்ள அண்ணன் விஜய பிரபாகரனுக்கும் உங்களது ஆதரவை வழங்கி உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார் எனவும் தெரிவித்தார். இதில் அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் திரைபடநடிகர் மீசைராஜேந்திரனும் உடன் அவருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Watch – YouTube Click

What do you think?

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அவர்கள் தேர்தல் பரப்புரை

வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – பிரேமலதா பேட்டி