in

டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணி

டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணி

 

தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததால் சேர்ந்துள்ள டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தது மற்றும் துணிமணிகள் விற்பனை பாலித்தீன் பைகள் என சுமார் தஞ்சை மாநகராட்சியில் மட்டும் 250 டன் குப்பை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் .

சாதாரணமாக நாளொன்றுக்கு 110 டன் குப்பை நாளொன்றுக்கு வரும் நிலையில் தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு கழிவுகள் சேர்ந்து தற்போது 250 டன் அளவிற்கு சேர்ந்துள்ளது.

தஞ்சை மாநகராட்சி பொருத்தவரை எப்பொழுதும் வழக்கமாக 51 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நாளொன்றிற்கு சுமார் 110 முதல் 120 டன் குப்பை வரும் ஐம்பத்தொரு வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பை ஜெபமாலைபுறம் குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவது வழக்கம்.

தற்போது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன.

பட்டாசு வெடித்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 110 டன் குப்பை சேர்ந்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதும் குப்பைகளை தூய்மை செய்ய 300 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 40 கனரக வாகனங்கள் குப்பை அள்ளி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூய்மை பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் குள்ளாக மாநகர் முழுவதும் தூய்மை செய்யக்கூடிய பணி என்பது நிறைவடையும் என தெரிகிறது.

What do you think?

ஒன்பது கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம்

ஐப்பசி மாத கந்தசஷ்டி திருவிழா