in

150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை அரசு பேருந்தில் சுற்றி வரலாம்


Watch – YouTube Click

150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை அரசு பேருந்தில் சுற்றி வரலாம்… போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பால் பயணிகள் உற்சாகமான பயணம்…

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம்.

குறிப்பாக கோடை காலங்களில் தரைத்தளங்களில் சதத்தை அடித்து தாண்டும் வெயிலின் தாக்கம் தாளாமல் மலை நகரங்களை நோக்கி வழக்கமாகவே சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பார்கள். மலை நகரம் என்றாலே முதல் வரிசையில் உதகை , கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்கள் வருகின்றன. குறிப்பாக தரைத்தளங்களில் நிலவும் வெயிலை காட்டிலும் குறைந்த அளவிலான வெயிலின் தாக்கம் மற்றும் இரவில் குளிரும் நிலவுவதால் கொடைக்கானலை நோக்கி தற்போது படையெடுக்க துவங்கி உள்ளனர் சுற்றுலா பயணிகள் .

தற்போது மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானலை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர் .இன்று முதல் ஜூன் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை சீசனில் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் உள்ள இயற்கை காட்சிகளை அனுபவிப்பார்கள். தற்போது தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் சார்பாக 150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன்மரக்காடுகள், குணா குகை,
தூண் பாறை ,அப்பர் லேக் வியூ, சைலன்ட் வேலி உள்ளிட்ட 12 சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு பெரியோர்களுக்கு 150 ரூபாயும் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 75 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது .
காலையில் 9:00 மணி முதல் கூட்டத்தை பொறுத்து சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காலை வேலையில் புறப்படும் இந்த சுற்றுலா பேருந்து சுற்றுலாப் பயணிகளின் கடும் கூட்டத்திலும் சுற்றுலாத்தலங்களை சுற்றி வருகிறது.

பட்ஜெட் பயணமாக வரக்கூடியவர்களுக்கு இந்த 150 ரூபாய் பேருந்து பயணம் மிகவும் பயனுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றன. மேலும் இதே போன்று சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தக் கோடை சீசன் மட்டுமல்லாது இதுபோன்ற மற்ற கூட்ட நாட்களிலும், திருவிழா நாட்களிலும் இதுபோன்ற வசதியை கையில் எடுக்க வேண்டும் என பேருந்து பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக கோடை சீசன் களில் இது போன்ற சிறப்பு பேருந்து இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் நடந்த பயங்கரம்

மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது