in

மகாகவி பாரதி நினைவிடங்களுக்கு சென்றுபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆய்வு


Watch – YouTube Click

மகாகவி பாரதி நினைவிடங்களுக்கு சென்றுபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆய்வு

 

மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியம் மற்றும் ஆய்வு மையத்தைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுப்ரமணிய பாரதியார் மற்றும் செல்லம்மாள் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து அருங்காட்சியக அதிகாரிகள் விளக்கினார்கள்.

பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலகட்டத்தில் எழுதிய படைப்புகளை தனியாக பட்டியலிட்டும் தொகுத்தும் வைக்குமாறு துணைநிலை ஆளநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பாரதியும் பாரதிதாசனும் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரிக்கும்படியும் அதற்கான தகவல் பொதுமக்களுக்கு போய் சேரும் விதமாக அறிவிப்பு விளம்பரம் கொடுத்து கேட்டுப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.

புதுச்சேரியில் பாரதி நடத்திய “இந்தியா“ பத்திரிகையின் நினைவாக அதே பெயரில் மாத இதழ் ஒன்று வெளிவர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து நடைப் பயணமாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாரதிதாசனின் உருவச் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பாரதிதாசன் படைப்புகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் அவருக்கு விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்யையா-சரஸ்வதி நினைவு இல்லத்தைப் பார்வையிட்டு அவர்களது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Watch – YouTube Click

What do you think?

விதிமுறையை மீறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – 700 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூரில் வேளாண் முனைவர் பட்ட மாணவர் விபரீத முடிவு