in

14-வது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


Watch – YouTube Click

14-வது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேவுள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 14-வது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடு மாடு, சின்ன மாடு என 3- பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

போட்டியானது ஜி.தும்மலப்பட்டியில் துவங்கி கணவாய்ப்பட்டி வழியாக வத்தலகுண்டு பைப்பாஸ் சாலை வரை சுமார் 10-கி.மீ தூரம் சென்று திரும்பியது,

இதில் திண்டுக்கல், மதுரை,தேனி, கம்பம், ,பழனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறி பாய்ந்தது…

இப்போட்டியில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோம்பை காளிதாஸ் ஜோடி மாட்டிற்கு வெள்ளியிலான தார் கம்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 30-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2,3,4 இடங்களை பிடித்த மாடுகளுக்கு முறையே 20-ஆயிரம் முதல் 10-ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் மற்றும் கேடயம், பீரோ, சேர், சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் நாட்டாண்மைகள் என பலரும் சிறப்பாக செய்து இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

Beauty Tips கொடுக்கும் நடிகை சாய் பல்லவி

ரேபரேலி தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல்