in ,

ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்


Watch – YouTube Click

ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது.

இரு தரப்பு போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்கள் , உலகளாவிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இன்னும் காஸாவில் போர் சத்தம் ஓய்ந்தபாடில்லை.இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நோன்பு காலம் தொடங்கி, ஏப்ரல் 9ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நிறைவடைகிறது. இஸ்லாமியர்களின் உயரிய பண்டிகையாக கருதப்படும் இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் நேற்று பதிவு செய்த வீடியோவில் , இரு தரப்பும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பணயக்கைதிகள் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை அடுத்ததாக இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கியுள்ளது. அடுத்த திங்கட்கிழமைக்குள் இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புவதாகவும் அந்த வீடியோவில் பைடன் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

அண்ணாமலை கடைக்கு யாரும் வரவில்லை ஜெயக்குமார் கிண்டல்

மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் போட்டி