in

ஆலங்குடி குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


Watch – YouTube Click

உலக பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோவிலில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்தாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும். ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள். அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் பரிகார ராசிகள் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
வரும்26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மற்றும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தாளான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது


Watch – YouTube Click

What do you think?

நிர்மலா தேவி குற்றவாளி 2 பேர் விடுதலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்