in

வேளாண்மை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்- முதல்வருக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி


Watch – YouTube Click

வேளாண்மை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்- முதல்வருக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தோரணக்கல்பட்டி பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை ஆற்றினார்.

இந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்:
பல மொழிகளில் பேசும் திறன் பெற்றவர் வேட்பாளர் தங்கவேல். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் வெற்றி பெற்ற தொகுதி கரூர் தொகுதி என பெயர் எடுக்க வேண்டும்.

விளையும் பயிர் முளையில் தெரிவது போல் இந்த கூட்டமே அதற்கு சாட்சி. கரூர் மாவட்டம் அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. தனி அந்தஸ்து பெற்று முன்னேறியதற்கு அம்மா அரசு உறுதுணையாக இருந்தது. அம்மா ஆட்சியில் இங்கு தரமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகிறார். அவரால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சொல்லாமல் வாக்கு கேட்டு வருகிறார்.
திறமையற்ற முதல்வரை தேர்ந்தெடுத்து 36 மாதம் வீணாக போய் விட்டது.

தற்போது இருக்கின்ற காங்கிரஸ் வேட்பாளர் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். நம் வேட்பாளர் திறமையான வேட்பாளர்.

இந்தியாவிலேயே முதலிடமாக இருந்த நம் மாநிலம். தற்போது திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் அரசாக இருக்கிறது.

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் இருந்த போது நினைத்து இருந்தால் நீங்கள் ஒருவர் கூட வெளியில் இருந்திருக்க முடியாது. கரூர் மாவட்டத்தில் மட்டும் மிக மோசமான சூழ்நிலை. இதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதிமுக தொண்டன் எதற்கும் அஞ்ச மாட்டான்.

கட்சியை முடக்கப் பார்த்தார்கள். அதனை எல்லாம் தூள் தூளாக்கி அதிமுக தொண்டனுக்கான கட்சி என்பதை உறுதி செய்துள்ளோம்.

குறுக்கு வழியை கையாள்வது திமுக அரசு தான். 510 தேர்தல் வாக்குறுதியில் 10% கூட நிறைவேற்றவில்லை. 90% நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறீர்கள். திமுக தேர்தல் அறிக்கையில் பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் செய்யவில்லை.

நாம் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் தான் மகளிர் உரிமை தொகை கொடுத்தார்கள். 2021ல் ஆட்சிக்கு வந்திருந்தால் 2000 ரூபாய் உரிமை தொகை கொடுத்திருப்போம்.

100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக சொன்னார்கள். உயர்த்தினார்களா? நியாயவிலை கடையில் 2 கிலோ சக்கரை கொடுத்தார்களா? மின் கட்டணம் மாதம் ஒரு முறை எடுக்கப்படும் என்றார்கள் செய்தார்களா? எதுவும் கொடுக்கவில்லை அத்தனையும் பொய்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மூடுவதுதான் திமுகவின் சாதனை.

இங்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தார். 10 ரூபாய் பாலாஜி, 3600 கோடி கப்பம் கட்டிக் கொண்டிருந்தார். செந்தில் பாலாஜிக்கு வேண்டியவர்களை பார் நடத்தி 1000 கோடி கப்பம் கட்டினார். 5 கட்சிக்கு போயிட்டு வந்திருக்கிறார். செந்தில் பாலாஜி செயல் வீரர் என ஸ்டாலின் சொல்கிறார். அவர் சிறையிலேயே தான் இருக்க வேண்டும். ஊழல் செய்தவர் எங்கு இருப்பார்.

செந்தில் பாலாஜி இருந்த போது, சட்டமன்றத்தில் பேசியதையும், இப்ப பேசியதையும் கேட்டு, முடிவு செய்யுங்கள்.

சி ஏ ஏ கொண்டு வந்த போது அதிமுக மாநிலங்களவையிலும், வெளியிலும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஸ்டாலின் அவர்களே வேளாண்மை பற்றி என்ன தெரியும். விவசாயம் பற்றி பேச வேண்டும் என்றால் மேடை போடுங்கள் பேசுவோம் யார் விவசாயி என்பதை நிரூபிக்கிறேன். அதிமுக விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சி. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சி அதிமுக. நான் பாஜகவுடன் கள்ள தொடர்பில் இருப்பதாக சொல்கிறார்கள். அது நீங்கள் தான்.

தமிழகத்தில் போதை பொருள் கிடைக்கிறது. கஞ்சா எல்லா இடத்திலேயும் கிடைக்கிறது. திமுக நிர்வாகியை போதை பொருள் வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடி கொள்ளை அடித்திருப்பார்கள்.

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்கட்டணம், வீடு வரி உயர்ந்து விட்டது. தொழில்கள் மிகவும் நசிந்து விட்டது. பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நம் ஆட்சியில் நிறைய செய்து கொடுத்து இருக்கிறோம். கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை உள்ளிட்ட திட்டங்கள் பல கோடி மதிப்பீட்டில் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

சிறுத்தையை பிடிப்பதற்கு வன உயிரின காப்பாளர் – அபிஷேக் டோமர் நடவடிக்கை

கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் உதயநிதி பேச்சு