in

புதுச்சேரில் ஒரு கிலோமீட்டர் குளக்கரையை சுற்றி வந்து அம்மனுக்கு 108 பால் குடம்


Watch – YouTube Click

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் வில்லியம்மனுக்கு 108 பால் குடத்தை பெண்கள் ஒரு கிலோமீட்டர் குளக்கரையை சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வினோத வழிபாடு

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி லிங்கா ரெட்டிபாளையம் கிராமத்தில் புறா குளம் அருகே வில்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உலக நன்மைக்காகவும், கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், தற்போது நிலவி வரும் வெயிலின் தாக்கம் குறையவும் வேண்டி முதலாம் ஆண்டு 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது.

லிங்காரெட்டிபாளையம் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலம் மாடவீதி வழியாக ஒரு கிலோமீட்டர் அமைந்துள்ளது புறா குளக்கரையை பெண்கள் பால் கொடுத்தவுடன் சுற்றி வந்து வில்லியம்மனுக்கு அபிஷேகம் செய்து நூதன வழிபாடு நடத்தினர் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கோயில் பால்குடம் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை புதுச்சேரி பரபரப்பு

கொடைக்கானலில் லிப்ட் கேட்டு வாகனத்தை திருட முயன்ற இளைஞர்கள் கைது