தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை
ஆந்திர மாநிலம் கச்சிகோடில் இருந்து தஞ்சை வழியாக தூத்துக்குடி சென்ற ரயிலில் கஞ்சா மெத்த பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை நடத்தினார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்பட்டு புழக்கத்தில் விடப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து ஆந்திர மாநிலம் கோச்சி கோடு தூத்துக்குடி இடையிலான ரயில் தஞ்சை ரயில் நிலையம் வந்தது.
ரயிலில் பயணம் செய்பவர்களின் உடமைகளை மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
போதைப் பொருள் கும்பலை பிடிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தஞ்சை ரயில் நிலையம் வந்த ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்டறிய மோப்பநாய் உதவியுடன் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டன.

கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் தனியார் விடுதிகளில் குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி ஒட்டி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளாக தஞ்சை மாநகரம் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய மூன்று இடங்கள் முக்கிய இடங்களாக கண்டறியப்பட்டு என்றார்.
சிறப்பு ரோந்துகள் மூலம் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புற காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.
போக்குவரத்து இடையூறு இல்லாமல் மக்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து சாலையோர கடைகள் போட்டுள்ள வியாபாரிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அவர்களுடைய முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
குடிபோதையில் நடைபெறும் அடிதடி குற்ற சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களில் முழுமையாக குறைந்துள்ளன.

சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தஞ்சை நகரில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் அச்சம் இல்லாமல் தீபாவளியை கொண்டாட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்.


