in

திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

 

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 15ம் தேதி அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், அன்று மாலை கோவிலில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட வலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்கள் வர்ணம் தீட்டுதல், 9 கோபுரங்களிலும் விளக்குகள் பொருத்தும் பணிகள் மற்றும் தற்போது தீயணைப்புத் துறை மூலம் அம்முனி அம்மன் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் அருகே இரண்டு கோபுரங்களில் தண்ணீர் பீச்சி அடித்து கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கருமாரி தெப்பத்தில்  சிறப்பு அபிஷேகம்

2 டன் பீடி இலைகள் லாரியுடன் பறிமுதல்