400 கிலோ ரிச் கேக் தயாரிக்கும் பணி துவக்கம்
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் 52 நாட்கள் உள்ள நிலையில், தூத்துக்குடியில் முந்திரி, பாதாம், பிஸ்தா உலர் திராட்சைகள் அத்திப்பழம் உள்ளிட்ட உயர்தரமான ஸ்பைசஸ் களை பதப்படுத்தி 400 கிலோ ரிச் கேக் தயாரிக்கும் பணி துவக்கம்.!

தூத்துக்குடி கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்., அதிலும் குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகைக்காக கேக்குகளை அதிக அளவில் வாங்கி நண்பர்கள் உறவினர்கள் பக்கத்து வீட்டுக்காரர் என அனைவருக்கும் பரிசாக அளிப்பார்கள்.
ஆகவே, தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் 52 தினங்கள் உள்ள நிலையில் தூத்துக்குடியில் உள்ள டி எஸ் எப் கிராண்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் கேக் தயாரிக்கும் பணி இன்று துவங்கியது.
அதிகமாக பொதுமக்கள் விரும்பி வாங்கும் ரிச் ப்ளம் கேக்குகள் தயார் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக உலர் திராட்சைகள் மற்றும் முந்திரி, பாதாம், வால்நட், செர்ரீ பழம் , அத்திப்பழம், லெமன் ரின்ட்ஸ், டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு பியல், ஆப்ரிகாட் என 90 கிலோ ஸ்பைசஸ் மற்றும் பழரசம் தேன் உயர்தர மதுபானங்கள் சேர்க்கப்பட்டு ஊரவைக்கப்பட்டன.
தொடர்ந்து ஹோட்டல் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கேக் தயாரிக்கும் கலைஞர்கள் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பி அணிந்தபடி கிறிஸ்மஸை வரவேற்கும் வகையில் ஹேப்பி கிறிஸ்மஸ் என்று உற்சாக குரல் எழுப்பியபடி கேக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தயார் செய்யப்படும் ரிச் பிளம் கேக் சுமார் 40 நாட்கள் ஊற வைக்கப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பு சுவையான 400 கிலோ எடை கொண்ட கேக்காக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் வகையில் சத்தான பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரிச்ப்ளம் கேக்குகளை அனைவரும் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கடந்த 18 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் கேக் தயாரிக்க பணி நடைபெற்று வருவதாகவும் கடந்த 2025 ஆம் ஆண்டு 300 கிலோ கேக் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 400 கிலோ கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றதாக டி எஸ் எப் கிராண்ட் பிளாசா மேனேஜிங் டைரக்டர் சந்திரா தெரிவித்தார்.


