வசந்த் & கோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா
தூத்துக்குடி மாநகரில் வி.இ.ரோடு, அந்தோணியார் கோவில் அருகே புதுப்பிக்கப்பட்ட வசந்த் & கோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி, புதிய கிளையின் விற்பனையை தொடங்கி வைத்தார்.

புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகையாக தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.