in

சமூக நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார்

சமூக நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார்

 

தூத்துக்குடியில் நடுரோட்டில் பூனையைக் கொன்று தோலை உரித்த பிரபல ரவுடி டேஞ்சர் வினோத் தட்டிக்கேட்ட விலங்கு நல ஆர்வலர்., வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

தொடர்ந்து தூத்துக்குடியில் பூனை மற்றும் நாய்களை கொன்று மருந்து மற்றும் உணவுக்காக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் பகுதியில், சாலையின் நடுவே பூனை ஒன்றைக் கொன்று அதன் தோலை ஒரு நபர் உரித்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற விலங்கு நல ஆர்வலர் சரவண செல்வி என்பவர், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்த நபரிடம், எதற்காகப் பூனையைக் கொல்கிறீர்கள்? உங்கள் வீடு எங்கே இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த நபர், பாப்பா போங்க பாப்பா எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், பூனையைக் கொல்வதை நிறுத்துமாறு சரவண செல்வி தொடர்ந்து கூறி வருகிறார். அதற்கு அந்த நபர் இது என்னுடைய பூனைதான் நான் வெட்டவில்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த சரவண செல்வி, வெட்டவில்லை என்றால் இது பூனையா ஆடா? எனக் கேள்வி எழுப்பி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையின் நடுவே பூனையைக் கொன்று தோலை உரிப்பது தொடர்பான இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

விலங்குகள் மீதான இத்தகைய செயல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தெண் பாகம் காவல் நிலையத்தில் பீப்பிள்ஸ் ஃபார் அனிமல்ஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வீடியோவில் இருக்கும் நபர் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோல்டன் புறம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேஞ்சர் வினோத் என தெரிய வந்துள்ளது.

டேஞ்சர் வினோத் குறித்து காவல்துறைக்கு நன்கு தெரிந்த நிலையில் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

தொடர்ந்து இதுபோன்று பூனை மற்றும் நாய்களை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சிலர் உணவு மற்றும் மருந்து என்ற பெயரில் கொன்று சாப்பிட்டு வருவதை உடனடியாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாணம்

திருக்கார்த்திகை தீப திருவிழா 1008 சங்கு அபிஷேகம்