in

தூத்துக்குடியில் பரவலாக மழை – பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் அவதி!

தூத்துக்குடியில் பரவலாக மழை – பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் அவதி!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்

What do you think?

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாட்டம்

🌧️ தூத்துக்குடியில் கனமழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு!