in ,

🌧️ புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தீவிரம்!

🌧️ புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தீவிரம்!

புதுச்சேரி மாநில நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்படும் தரமான கைத்தறி துணி வகைகள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதையும் .தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஜவுளி வகைகளை ஒரே இடத்தில் விற்பனை செய்வதையும் நோக்கமாக கொண்ட புதுச்சேரி அரசு நிறுவனமான பால்டெக்ஸ் தீபாவளி 2026 கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி கண்காட்சியை திறந்து வைத்து ஜவுளி வகைகளை பார்வையிட்ட அவர் முதல் விற்பனையும் தொடங்கி வைத்தார்.

தொடந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி…

நலிந்து வரும் நெசவுத் தொழிலை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி கண்காட்சி நடத்தப்பட்டு இருக்கிறது இதில் பொது மக்களுக்கு 25% தள்ளுபடி விலையில் கதர் ஆடைகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,அனைத்து தரப்பு மக்களும் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பருவ மழை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி…

புதுச்சேரியில் பருவமழையை சமாளிக்க பொதுப்பணித்துறை மின்துறை உள்ளாட்சித் துறை நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் முழு வீச்சுடன் தயார் நிலையில் உள்ளது என்றும் பதில் அளித்தார்.

What do you think?

🚨 தேனியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!

திருவாடானையில் ரூ.3.95 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு!