கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் 60 கிலோ கேக்..
புதுச்சேரி.. 10 கிலோ உலர்பழங்கள்-பருப்புகள்.. 4 லிட்டர் மது வகைகள்..
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகும் 60 கிலோ கேக்.. ஆர்வத்துடன் பங்கேற்ற சுற்றுலா பயணிகள்…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுச்சேரி ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக விதவிதமான பிரம்மாண்ட கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகரப் பகுதியில் உள்ள டி-ஈரோப் French ஓட்டலில் 7வது ஆண்டாக கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி பழ வகைகளில் மதுபானங்களை ஊற்றி ஊறல் வைக்கும் விழாவில் உணவகத்தில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்..
10 கிலோ எடையிலான திராட்சை, முந்திரி, செரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரிச்சம் என 20 வகையான நட்ஸ் மற்றும் 4 லிட்டர் உயர் ரக மதுவகைகளை கலந்து மகிழ்ந்தனர்.

இந்த கலவையானது 30 நாட்கள் ஊர வைக்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி 60 கிலோ அளவில் கேக் தயாரித்து காட்சிப்படுத்தி கிறிஸ்மஸ் மட்டும் புத்தாண்டை ஒட்டி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புத்தாண்டு வரை வழங்கப்பட உள்ளதாக தலைமை சமையல் கலைஞர்
சரவணன் தெரிவித்தார்.
கொண்டாட்டம் என்றாலே புதுச்சேரியில் தான் இருக்க வேண்டும்.அதுவும் கிறிஸ்துமஸ் புத்தாண்டை ஒட்டி கேக் தயாரிப்பதில் மிக்க மகிழ்ச்சியுடன் ஆர்வத்துடன் பங்கேற்றதாக வாடிக்கையாளர்களும் சுற்றுலா பயணிகளும் தெரிவித்தனர்.

