in

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு த.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு த.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

 

கண்டமனூர் புதுக்குளம் கண்மாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், ₹353 கோடி நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு த.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (நவம்பர் 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் அமைந்துள்ள புதுக்குளம் கண்மாயில் தனியார் நிறுவனங்கள் சார்பில் சட்டவிரோதமாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட முறை மனுக்கள் வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள ஆசாரிப்பட்டி, ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்தூர், மரிக்குண்டு, கோத்தலூத்து, தேக்கம்பட்டி, கண்டமனூர் உட்பட 12 கண்மாய்களுக்கு முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் நிரப்பினால், இப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

இதற்காக மாவட்ட நீர்வளத்துறை திட்ட வடிவமைப்பு கோட்டம் சார்பில் ₹353 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்குத் தாக்கல் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, உடனடியாக இந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

What do you think?

காா்த்திகை மாத திருவாதிரை அபிஷேகம்

கமுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்