ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோயிலில் சூரசம்ஹார திருவிழா
தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோயிலில் சூரசம்ஹார திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பி சூரசம்ஹார திருவிழாவை கண்டு தரிசித்துச் சென்றனர்.

தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக வடிவழகர் முருகன் கையில் வேலுடன் வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பின்னர் வடிவழகர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சப்பரத்தில் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க வீதி உலா புறப்பட்டார்.
ஒவ்வொரு வீதிகளிலும் வழி நடுவே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா அரோகரா எனக் கோசங்களை எழுப்பினர் .
நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்த முருகப்பெருமான் ஒவ்வொரு வீதிகளிலும் கஜமுகம், சிங்கமுகன், வானுகோபன், சூர பத்மன் என முகம் கொண்ட அசுரர்களை தனது வேலை கொண்டு சூரசம்ஹாரம் செய்தார்.
இந்த திருவிழாவில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்கார நிகழ்ச்சியை கண்டு தரிசித்துச் சென்றனர்.


