அழகன் முருகன் திருக்கோவில் கந்தசஷ்டி பெருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள அழகன் மலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நெடுங்குடி டாக்டர் எஸ். மணிகண்ட சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வைக் காண ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மற்றும் கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களான இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.
சூரனை வதம் செய்த பின்னர், முருகப்பெருமானின் வேலாயுதத்திற்கு பால், தண்ணீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி சார்பில் தர்மகர்த்தா ரத்தினம், தலைவர் ஜெயக்குமார் ரெட்டி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
முதலாம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர். விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது கோவில் கமிட்டி சார்பில்,.


