ஒசூரில் ஈச்சர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
ஒசூரில் வெங்காய பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் காயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தர்கா பகுதியில் ஈச்சர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளநிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..
கர்நாடகா மாநிலம் ஒசக்கோட்டா பகுதியிலிருந்து வெங்காயம் பாரம் ஏற்றிய ஈச்சர் லாரி ஓசூர் வந்தபோது பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் காயமடைந்துள்ளார்..

108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
கொட்டும் மழையில் சாலையில் வெங்காய மூட்டைகள் சிதறி கிடந்த நிலையில் போலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


