in

புவனகிரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

புவனகிரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அஸ்த நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பால் பழம் பன்னீர் இளநீர் தயிர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

இதனை தொடர்ந்து மூலவர் சிவலிங்கத்தின் மீது அன்னம் மற்றும் 500 கிலோ அளவிலான பல்வகை காய்கறிகள் பல்வகை கனிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது .

இந்த அன்னாபிஷேக அலங்காரத்தை பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்து சென்றனர் .பின்னர் பக்தர்களுக்கு ஆலய அருட் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது .இவ் விழாவில் புவனகிரி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு வேதபுரீஸ்வரர் அருளாசி பெற்றுச் சென்றனர்

What do you think?

சிறப்பு ஊக்கத்தொகை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!