in

சிதம்பரம் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து – 16 வயது சிறுவன் உயிரிழப்பு!

🚨 சிதம்பரம் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து – 16 வயது சிறுவன் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே பி. முட்லூர் ஹால்மார்க் நகரை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் பவர்சன் 16 நண்பரின் உயர்ரக இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு பரங்கிப்பேட்டையில் இருந்து முட்லூர் நோக்கி அதி வேகமாக வந்துள்ளார்.

இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார் விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தில் உயிரிழந்த 16 வயது சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

16 வயதான சிறுவன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

“ஒன்றிணைவோம்” மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே பிரதோஷ விழா! சேறும் சகதியுமான பாதையால் பக்தர்கள் அவதி!