in

சோழவந்தான் அருகே பிரதோஷ விழா! சேறும் சகதியுமான பாதையால் பக்தர்கள் அவதி!

சோழவந்தான் அருகே பிரதோஷ விழா! சேறும் சகதியுமான பாதையால் பக்தர்கள் அவதி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏலவார்க் குழலி அம்மன் ஏடகநாதர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு திருவேடகம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்த நிலையில் கோவிலுக்கு செல்லும் மாட வீதியை கடந்து செல்ல வேண்டிய நிலையில் மாடவீதி முழுவதும் மழை காரணமாக சேரும் சகதியுமாக இருந்ததால் பிரதோஷ விழாவிற்கு வந்த பொதுமக்கள் பக்தர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோவிலுக்கு செல்லும் பாதை சேதமடைந்த மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் பக்தர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் தற்போது வரை சரி செய்யாத நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் கனமழை பெய்து வரும் நேரத்தில் கோவிலுக்கு செல்லும் பாதை மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது .

இதனால் பிரதோஷ வழிபாட்டிற்காக கோவிலுக்கு வந்த பக்தர்கள் சேரும் சகதியுமாக இருந்த பகுதியில் சென்று சாமி தரிசனம் செய்ததில் மனவருத்தம் ஏற்பட்டதாக கூறிச் சென்றனர் அதிகாரிகள் கோவில் பகுதியில் உள்ள சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

What do you think?

சிதம்பரம் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து – 16 வயது சிறுவன் உயிரிழப்பு!

Casino Test App – Die ultimative Anleitung für Spieler