மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிதம்பரத்தில் அமைதிப் பேரணி
திருப்பரங்குன்றம் உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி. மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிதம்பரத்தில் அமைதிப் பேரணி. கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்பு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்படி இன்று மாலை தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், எனவே மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மதவெறி அரசியலை முறியடிப்போம் என்பதை வலியுறுத்தியும் சிதம்பரத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணி சிதம்பரம் தெற்கு வீதியில் இருந்து துவங்கியது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் தெற்குவீதி, மேல வீதி வழியாக சென்று பெரியார் சிலையை அடைந்தது.
அங்கு அமைதிப் பேரணியை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, வி.சி.க. மண்டல செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.


