in

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம் அபிஷேக விழா

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம் அபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் நகரில் உள்ள தேவாரம் பாடல் பெற்றதும், தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரம் அன்று சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகம் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் 500 கிலோ அன்னத்தால் சுயம்பு மூர்த்தியான மூலவரான ஆட்சீஸ்வரர், இரண்டாவது மூலவரான உமையாட்சீஸ்வரர் மற்றும் ஸ்தல விருட்சம் கொன்றை அடி ஈஸ்வரர் ஆகிய மூவருக்கும் அன்னத்தால் அபிஷேகமும்,பழம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரமும் மகாதீபாரதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று அண்ணா அபிஷேகத்தால் அருள்பாளித்த ஈஸ்வரனை வழிபட்டு சென்றனர்.

அதன் பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேகத்தால் அருள்பாளித்த சிவனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில்,அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

சிறப்பு ஊக்கத்தொகை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்