ஸ்ரீ சாய் பாபா சுவாமி திருக்கோவில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாபா சுவாமி திருக்கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, சாய் பாபா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாய் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


