in

தொழிலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தியுள்ள மீனவர்கள்

தொழிலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தியுள்ள
மீனவர்கள்

 

வங்கக்கடலில் உருவான ‘அக்வான்’ புயல்… 3வது நாளாக தொழிலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தியுள்ள மீனவர்கள்..
படகு-வலைகளை சீர்செய்து வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக்வான்’ புயலாக உருவெடுக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் உட்பட வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று (திங்கட்கிழமை ) மாலை அக்வான்’ புயலாக உருவாகிறது.
நாளை (செவ்வாய்கிழமை) தீவிர புயலாக வலுப்பெறும்.

புதுச்சேரியை நேரடியாக தாக்காது என்றாலும், புயலின் தாக்கத்தால் புதுவை கடலோரத்தில் பலத்த காற்று, கடல் சீற்றம், கனமழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம், மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி புதுச்சேரி மீனவர்கள் படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. படகு மற்றும் வலைகளை மீனவர்கள் துறைமுக வளாகத்தில் வைத்து சீர் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் படகுகளை இயக்க சுற்றுலாத்துறை தடை வித்துள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ போலீசார் தடை விதித்துள்ளது..

What do you think?

நத்தம் அருகே முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்!

கடலூரில் நீலம் இ.வி. கான்செப்ட் ஸ்டோர் திறப்பு விழா