in

வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம்


Watch – YouTube Click

வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம்

 

நெல்லை தென்காசி மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிலை வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் தயவு செய்து வெயில் காலத்தில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார்.

ஓ பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட பிச்சைதான் இதனை பொது வழியில் கேபி முனுசாமி போன்றோர் அசிங்கமாக பேசி வருகின்றனர்.

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி தற்போது கேபி முனுசாமிக்கு கிடைத்துள்ளது ஓபிஎஸ் போட்ட பிச்சை என்பதை மறந்து விடக்கூடாது அவர். அதிமுக தனது கையில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மாயை உருவாக்கி வருகிறார்.

இதுவரை நீதிமன்றங்கள் போட்ட உத்தரவுகள் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சிவில் வழக்கு எங்கு நிலுவையில் உள்ளதோ அங்கு சென்று மூன்று வாரத்திற்குள் மனு செய்து அந்த வழக்கை பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் சொல்லி உள்ளது எங்களுக்கு நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது.

ஆனால் ஓபிஎஸ் தரப்பு போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டனர். கொங்கு பகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரை அண்ணாமலை தற்போது பார்சல் செய்து கொண்டு சென்று விட்டார். நிரந்தரமாக இருப்பவர்களை பற்றி மட்டுமே தற்போது பேச வேண்டும்.

ஜார்ஜை காலத்தில் வாக்காளர்கள் ஜெயலலிதாவை மதித்ததால் ஜானகி அம்மையார் ஜெயலலிதாவிடம் கட்சியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள் என அனைத்து பொதுமக்களும் சொல்லி வருவதை எடப்பாடி பழனிச்சாமி நினைவில் கொள்ள வேண்டும்.

இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முழு அதிகாரம் தேர்தல் ஆணையம் இடமே உள்ளது 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால் எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

அவர்கள் தரப்பும் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் நாங்கள் ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட்டது போல் தனி சின்னத்தில் இருப்பது தொடர்பாக நடவடிக்கையை ஓபிஎஸ் எடுப்பார் கூட்டணி கட்சி சின்னத்தில் நிற்பது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து.

நான்கரை ஆண்டு ஆட்சி காலம் நடக்க பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது தற்போது அது முடிந்து விட்டதாக அவர் கூறுகிறார் பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த உறவு முடிவும் இல்லை தற்போது வரை மக்களவையில் அதிமுகவின் எம்பி ஆகவே ரவீந்திரநாத் செயல்பட்டு வருகிறார்.

சிஏஏவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பது பிரியாமல் இருந்து விட்டது. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

பாஜக, பாமக, தேமுதிக, பாமக, தினகரன் பாரிவேந்தர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட மேலும் பல இணைந்த கூட்டணி உருவாகும் எடப்பாடி பழனிச்சாமி தனித்து விடப்பட்டு விட்டார் ஒரு வார காலமாக கடை உரித்தும் இதுவரை எந்த கட்சியும் அவரிடம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை.

பாமக தேமுதிக அசிங்கப்படுத்திவிட்டு அவர்களை அழைத்தால் எப்படி கூட்டணிக்கு வருவார்கள் ஒரு கட்சி சிதறி போனால் சிறிய கட்சிகள் கூட கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும் மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டும் என்பதே மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது சசிகலா டிடிவி ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

மரங்களை வெட்டும் ஏலத்தில் முறைகேடு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்