in

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை


Watch – YouTube Click

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி சென்றனர்.

தொடர்ந்து நடைப்பெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், கணினி ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றிய கூறப்பட்ட நிலையில்,

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்து வருகின்றனர். ஜாமீன் மீதான மனு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வந்துள்ளனர்.

இந்த வீட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டு கார்களில் வந்த ஐந்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீண்டும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இணையவாசிகள் மேல் கோபம் கோப்பளிக்க கேள்வி கேட்ட ராஷ்மிக்கா.. அப்போ தயாரிப்பாளர்கள் தலையில் துண்டா

வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம்