in

புதுச்சேரி இன்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்


Watch – YouTube Click

புதுச்சேரி வேட்பு மனு தாக்கல் இறுதிநாளான இன்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்…

தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ந் தேதி தொடங்கியது. முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 2ம் நாளான 21ந் தேதி சுயேச்சையாக போட்டியிட கூத்தன் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

3ம் நாளிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 23, 24ம் தேதி விடுமுறை. நேற்று முன்தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, சுசி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சங்கரன், சுயேச்சை வேட்பாளர் கலா உட்பட 8 பேர் மனு தாக்கல் செய்தனர்.

நேற்றைய தினம் பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர் அலங்காரவேலு, சுயேச்சையாக மணிகண்டன், கிஷோர்குமார், கிருஷ்ணமூர்த்தி, அருணாச்சலம், நிர்மலா, கொளஞ்சியப்பன், ராமதாஸ் உள்ளிட்ட 8 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம் மனு தாக்கல் செய்தார். வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு காத்திருந்து காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், மதிமுக கபிரியேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் மனு தாக்கல் செய்ய இந்தியா கூட்டணி கட்சியினர் அணிவகுத்து நின்றதால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

வீடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’ எச்சரிக்கும் YouTube

அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கிய ராகவா லாரன்ஸ், பாலா