பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்
காசா போர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவி விலக வலியுறுத்தல்
இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவர் ஸ்டார்மர் காசா போர் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்காக அவரை லேபர் கட்சியில் மூத்த தலைவர்கள் சாதிக் கான், ஆண்டி பண்ஹாம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டார்மறை எதிர்க்கட்சி தலைவர பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்தனர். அதேசமயம் கட்சியில் ஒரு சில எம்பிக்கள் ஸ்டார்மருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டார்மர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என லேபர் கட்சியை சேர்ந்த பர்னிலே கவுன்சில் தலைவர் அன்வர் மற்றும் பென்டில்வாரோ கவுன்சில் தலைவர் அஜ்ஜத் முகமது ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
AI ரோபோக்கள் குறித்து
எலான் மஸ்க்கிடம் பிரிட்டன் பிரதமர் கவலை தெரிவித்தார்
பிரிட்டனின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி ஆங்காங்கே முகத்தை ஸ்கேன் செய்யும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் இந்த கேமராக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதனால் பொதுமக்களின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுவதாகவும் எனவே ஏஐ கேமராவுக்கு தடை விதிக்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது மட்டுமன்றி ஏ ஐ ரோபோட்டுகள் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ரோபோட்டுகளால் மரங்களில் ஏற முடியும். ஒரு நண்பனைப் போல நம்முடன் கலந்துரையாட முடியும். இதனால் பொது மக்களுக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு இருப்பதாக கூறி அதை தயாரிக்கும் எலாண் மாஸ்க்கிடம் பிரிட்டன் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். பிரிட்டனில் AI மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது இருவரும் சந்தித்து பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனை புரட்டிப்போட்ட சியாரன் புயல்
பிரிட்டனில் சியாரின் புயல் நேற்று வீசியதால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்று ஏறத்தாழ 100 மீட்டர் வேகத்துக்கு வீசியது. புயலுடன் சேர்ந்து மழையும் பெய்ததால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஜெர்சி பகுதியில் பயங்கர சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களிலும் புயல் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
காசாவில் இருந்து வெளியேற காத்திருக்கும் 100க்கும் மேற்பட்ட பிரிட்டன் மக்கள்
காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் தங்கி உள்ள இங்கிலாந்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தாயகம் தரும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
நாட்டிங்காம் அருங்காட்சியகத்தில் அரிய வகை பொருட்கள் மாயம்
நாட்டிங்காம் அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சமீபத்தில் வேலைக்கு வந்த பணியாளர்கள் சில்வரினால் செய்யப்பட்ட சில பொருட்கள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த அருங்காட்சியத்தில் மேல்பகுதியில் சென்று சோதனை செய்தபோது ஓட்டை போட்டு உள்ளே புகுந்து மர்ம நபர்கள் அரியவகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து அரியவகை பொருட்களை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இத்தாலியில் புயலுக்கு மூன்று பேர் பலி
ஆறு பேர் மாயம்
ஐரோப்பிய நாடுகளை சியாரன் புயல் போட்டு தாக்கியது. இதனால் இத்தாலியின் தாஸ்கெனி பகுதியில் வயதான மூன்று பேர் பலியாகினர். மேலும் 6 பேர் மாயமாகினார்.
இந்தப் புயலால் இத்தாலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலின் கோர தாண்டவத்தால் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை காண முடிந்தது. இதனால் ஏராளமானோர் தங்களது உடைமைகளை இழந்தனர்.
சியாரன் புயல் இத்தாலியில் 207 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பாரிஸில் பயணிகளுக்கு மிரட்டல் விடுத்த பெண்ணை சுட்டுக்கொன்ற போலீசார்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் RER suburban train இல் பயணித்த பெண் ஒருவர் சக பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அதிர்ச்சிகுள்ளான பயணிகள் உடனடியாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை கீழே போடுமாறு அந்த பெண்ணுக்கு அறிவுறுத்தினர். ஆனால் அந்தப் பெண் துப்பாக்கியை கீழே போடாமல் தொடர்ச்சியாக சக பயணிகளை மிரட்டி வந்தார்.
மேலும் போலீசாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து அல்லாஹ் ஹூ அக்பர் என்று அந்த பெண் முழக்கம் எழுப்பினார்.
இதனால் அவர் தீவிரவாதி என்பதை அறிந்து கொண்ட போலீசார் அந்த பெண்ணை உடனடியாக சுட்டு தள்ளினர். ஏறத்தாழ 8 ரவுண்டுகள் சுட்டதில் அந்த பெண் அப்படியே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிர் இழந்தார்.
ரயிலில் நடைபெற்ற இந்த சம்பவம் மற்ற பயணிகளை அதிர்ச்சியை ஆழ்த்தியது.