in

குஷ்பூ உருவ படத்தை எரித்தும் திமுக மகளிர் அணியினர் போராட்டம்


Watch – YouTube Click

குஷ்பூ உருவ படத்தை எரித்தும் திமுக மகளிர் அணியினர் போராட்டம்

 

புதுச்சேரியில் குஷ்பூவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், உருவ படத்தை எரித்தும் திமுக மகளிர் அணியினர் போராட்டம்

பாஜகவுக்கு வாக்கு கேட்டு குஷ்பூ புதுச்சேரி வந்தால் விரட்டி அடிப்போம் என பெண்கள் ஆவேசம்

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி குஷ்பூ, தமிழகத்தில் திமுக சார்பில் கொடுத்தவரும் மகளீர் உரிமைத்தகையை பிச்சை என்று கொச்சைப்படுத்தி பேசியதை புதுச்சேரி திமுக மகளிர் அணியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து காமராஜர் சாலை பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாநில மகளிர் அணி தலைவி காயத்ரி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தீ வைத்து கொளுத்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது குறித்து திமுக மகளிர் அணி தலைவி காயத்ரி ஸ்ரீகாந்த் கூறும் போது…

குஷ்பு தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு கேட்டு புதுச்சேரி குஷ்பு வந்தால் அனைத்து பெண்களும் ஒன்று சேர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து அவரை விரட்டி அடிப்போம் என ஆவேசமாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அம்மாவின் நினைவு நாளில்…. நெகிழ வைத்த பிக் பாஸ் ஆரி அர்ஜுன்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டிபன் பாக்ஸ் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு