in

புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருகிறது

புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருகிறது

 

புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு.. கொலை நகரமாக மாறி வருகிறது…
ஆட்சியைக் கவிக்க அமைச்சர்களே சதி செய்கிறார்கள்..

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி…

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு பணியில் சேர ஐந்து ஆண்டு காலம் வயது தளர்வை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியிலும் வயது தளர்வு அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுச்சேரி அரசு கூட்டுறவு வங்கிகளில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முழு காரணம். இதுகுறித்த வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட வேண்டுமென நாராயணசாமி வலியுறுத்தினார்..

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது. ரோந்து சொல்லாமல் கட்ட பஞ்சாயத்து செய்வார்கள்… வசூல் செய்வார்கள்.. பணமில்லாமல் FIR போட மாட்டார்கள்.

கொலை நகரமாக புதுச்சேரி மாறி வருகிறது. இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என அமைச்சர்களே சதி செய்கிறார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாராயணசாமி, ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் பனிப் போர் நடக்கிறது..

எந்த வேலை நடக்கவில்லை.. கோப்புகள் தூங்குகின்றன ..ஆட்சிக்கு ஸ்திரத்தன்மை இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொள்கைக்காக போராடினோம்.. என்.ஆர்- பாஜக ஆட்சியில் கொள்ளைக்காக ஆளுநருடன் சண்டை நடக்கிறது ..
ஆட்சிக்கு கலங்கும் விளைவிக்க அமைச்சர்களே வேலை செய்கிறார்கள் ..ஆட்சியைக் கவிக்க அமைச்சர்களே சதி செய்கிறார்கள்..

சட்டம் ஒழுங்கு சீர்கேடுவதற்கும் மக்கள் சொத்துக்களை எடுப்பதற்கும் உள்துறை அமைச்சர் தான் காரணம். பல அதிகாரிகள் இருந்தும் சட்ட ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தற்காலிக சபாநாயகர் இன்னும் நீடிக்க கூடாது..  அவர் அரசியல் செய்யக்கூடாது. நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்படாததற்கு இந்த அரசின் செயல்பாடு உதாரணம்.. இந்த அரசு செயல்படவில்லை என்பதற்கு இதுவே உதாரணம் எனவும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

What do you think?

எட்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை

குற்றவாளிகளை எளிதில் கண்டறிய 2000 கண்காணிப்பு கேமராக்கள்