in

மீன்வளத்துறை குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு

மீன்வளத்துறை குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு

 

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு; நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்து சென்ற அமைச்சர்

​நாகப்பட்டினம் மாவட்டம் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்ய மாதா பேராலயத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

​பேராலயத்திற்கு வந்த அமைச்சருக்கு, பேராலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேராலயத்தின் உள்ளே சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், தனது குடும்பத்தினருடன் மாதா முன்பு மண்டியிட்டு வழிபாடு செய்தார்.

தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். ​இதனைத் தொடர்ந்து, பேராலய வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் என சுமார் 100 பேருக்கு அமைச்சர் சார்பில் பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

​நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஸ்ரீநாத்திடம், அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காத அமைச்சர், அவர்களை நோக்கி இரு கைகூப்பி வணக்கம் தெரிவித்தவாறு “ஐ லவ் யூ… ஐ லவ் யூ…” என்று மட்டும் கூறி நழுவிச் சென்றார்.

What do you think?

குற்றவாளிகளை எளிதில் கண்டறிய 2000 கண்காணிப்பு கேமராக்கள்

இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டம் ராமாயணா! பாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படம்!