எட்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை 19,47,156….
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01-01-2027 தேதி அடிப்படையாகக் கொண்டு வறைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். ஒவ்வொரு பிரதிகளையும் ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் 01-01-2027 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்த நபர்களின் பெயரை நீக்குதல், முதல் தலைமுறை வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், மாற்றுப் பகுதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த நபர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என பல தரப்பினர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9,56,160 நபரும், பெண் வாக்காளர்கள் 9,90,840 நபரும், மூன்றாம் பாலினத்தவர் 156 நபர் மொத்தம் 19,47,156 பேர் என வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


