in

ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயில் மகாமகப் பெருவிழா பாலாலயம்

ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயில் மகாமகப் பெருவிழா பாலாலயம்

 

கும்பகோணத்தில் ராமசுவாமி கோயிலில் மகாமகத்தை முன்னிட்டு பாலாலயம் – ரூ.1.92 கோடியில் திருப்பணிகள் துவக்கம்

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயிலில் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது.

தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான இத்திருக்கோயிலில் இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

இங்கு இராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும் மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில் மகாமகப் பெருவிழாவையொட்டி ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் பாலாலயம் திருப்பணிகள் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

2028 மகாமகம் விழா பாலாலயம் துவக்கம்

எட்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை