in

உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம் … விமானத்தில் வாக்கு சேகரிப்பா?..

உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம் … விமானத்தில் வாக்கு சேகரிப்பா?..

தமிழ் திரையுலகின் முன்னாடி நடிகரான தளபதி விஜய் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நினைத்த நிலையில் மக்களுக்காக சேவை செய்வதுதான் எனக்கு முக்கியம் அதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று அரசியலில் குதித்து விட்டார்.

இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்ட நிலையில் அதிரடியாக பல மாச சம்பவங்களை செய்து இருக்கிறார். மகா சிவ ராத்திரியான நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.

தொடங்கியவுடன் விஜய் முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் தனது வலை பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்

பிற்போக்கும் எல்லா உயிருக்கும் என்கின்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னோடு இணைந்து மக்கள் பணி செய்ய வாருங்கள் நாங்கள்.

ஏற்கனவே வெளியிட்ட எங்களுடைய கட்சியின் உறுதிமொழியையும் படியுங்கள் உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் உடனே ஜாயின் பண்ணுங்க ப்ளீஸ்…

ஈசியாக எல்லோரும் உபயோகிக்கும் வகையில் தான் இந்த செயலி இருக்கிறது என்று விஜய் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் திரைப்படத்தில் பிஸியாக இருந்தாலும் இவரின் அரசியல் பயணமும் சூறாவலியை வீசுகிறது.

உறுப்பினர் சேர்க்கை நேற்று அறிமுகப்படுத்த பட்ட நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் விமானத்தில் வாக்கு சேகரிப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தேனி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக இருப்பவர் பாண்டி இவர் தன் கட்சி கொடியுடன் 2026 ஆம் ஆண்டு நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஒரு மாற்றம் தேவை என்றும் அதை தளபதியால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

What do you think?

ஒயின் கிளாசுடன் நயன்….உனக்கு வயசாயிடுச்சி …ம்மா… கலாய்க்கும் Viki

14 வருட நண்பருடன் விரைவில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம்