in

ஒயின் கிளாசுடன் நயன்….உனக்கு வயசாயிடுச்சி …ம்மா… கலாய்க்கும் Viki


Watch – YouTube Click

ஒயின் கிளாசுடன் நயன்….உனக்கு வயசாயிடுச்சி …ம்மா… கலாய்க்கும் Viki

எந்த விஷயத்தையும் வித்தியாசமாக செய்பவர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மகளிர் தினத்தையும் வித்தியாசமாக தனது குடும்பத்துடன் கொண்டாடி இருக்கின்றார்.

குடும்பத்துடன் துபாய் சென்ற நயன்தாரா தனது சுட்டி ட்வின்ஸ்…கலை Caretaker ரிடம் விட்டுவிட்டு கணவருடன் நைட் பார்ட்டியில் மஜா பண்ணி போட்டோக்களை வலைதளத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு வயதாகி விட்டது என்று கலாய்ச்சி அவரை ஓல்டு ஒன் என சொல்லி ஒயின் ஒயின் கிளாசுடன் நயன்தாராவை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்க… வயசானாலும் என் ஸ்டைலும் அழகும் அப்படியே தான் இருக்கும் என்று புன்னகைகும் நயனை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எப்1 கார் ரேஸ் பந்தயத்தையும் நேரில் சென்று பார்த்ததற்கான வீடியோக்களையும் புகைப்படத்தையும் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மகா சிவராத்திரி முன்னிட்டு பூஜா மற்றும் தமன்னா என்று பல நட்சத்திரங்கள் கண்விழித்து பிரார்த்தனை பண்ணும் நேரத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவும் கொண்டாடி இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கமென்ட் செய்தாலும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உஃப் ஐ அம் லாஸ்ட்” என நயன்தாரா பதிவிட்டது விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்து விட்டார் என்றே வதந்திகள் பரவ காரணமாக மாறிவிட்டது.

ஆனால் வதந்திகளை பரப்பியவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் அளவிற்கு இவர்களது புகைப்படம் மற்றும் வீடியோ செம மாஸ்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி பாலியல் குறித்து அறிக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம் … விமானத்தில் வாக்கு சேகரிப்பா?..