in

வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணியை தேர்தல் துறை அலுவலர்கள்


Watch – YouTube Click

வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணியை தேர்தல் துறை அலுவலர்கள்

 

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டும் பெறும் பணியை தேர்தல் துறை நேற்று 2ம் தேதி முதல் வரும் 5ஆம் தேதி வரை மேற்கொள்கிறது.

புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரியில் ஆண்கள் 4,80,569, பெண்கள் 5,42,979, மூன்றாம் பாலினத்தவர் 151 பேர் என மொத்தம் 10, 23, 699 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 85 வயதுக்கு வாக்காளர்கள் மேற்பட்டவர்கள் 1,609 பேர் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் 1322 பேர் உள்ளனர்.

இவர்கள் வீட்டிற்கு வந்து தங்கள் ஓட்டுநர் பதிவு செய்ய தேர்தல் துறையிடம் விண்ணப்பித்திருந்தனர். இதனை அடுத்து 87 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி ஓட்டு போடும் பணி நேற்று துவங்கியது.

இரண்டு ஓட்டு சாவடி அலுவலர்கள் ஒரு நுண் பார்வையாளர்கள் ஒரு போட்டோகிராபர் போலீசார் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு ஓட்டுப் வெட்டியுடன் நேரடியாக சென்று ஓட்டுகளை பெற்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஓட்டு அளிப்பது வீடியோ பதிவு செய்யப்பட்டது தபால் ஓட்டு பெரும் பணி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை