in

வாகன ஓட்டுநர் சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம்


Watch – YouTube Click

வாகன ஓட்டுநர் சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம்

 

தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டுநர் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கப் பேரவை மூலம் ஒன்றாக இணைந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு தற்போது மத்திய அரசு இயற்றியுள்ள சட்டம் (HIT and Run-BNS) விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகிவிட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது ஏழு லட்சம் அபராதம் என்கிற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள். அதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்தப் போராட்டத்தில் மாநில அரசு இயற்றியுள்ள மேக்ஸ் கேப் வாகனத்திற்கான ஆயுள் வரியை ரத்து செய்ய வேண்டும்.

ஒரு ஓட்டுநர் விபத்தில் உடல் ஊனமுற்றாலோ அல்லது மரணம் அடைந்தாலும் மாநில அரசும் ஐந்து லட்சமும் மத்திய அரசு ஐந்து லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் நடக்கும் விபத்துகளில் ஓட்டுநருக்கு உரிய பாதுகாப்பு அந்தந்த மாநில அரசும் மற்றும் மத்திய அரசும் வழங்க வேண்டும். அந்த வாகனம் எந்த மாநிலத்திற்கு உரியதோ அந்த மாநில அரசு அதற்குரிய நடவடிக்கை எடுத்து ஓட்டுநரை பாதுகாக்க வேண்டும்.

வழிகளில் நடக்கும் திருட்டு மற்றும் ஓட்டுநரை தாக்குவது அந்தந்த மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து ஓட்டுநரை பாதுகாக்க வேண்டும்.

NH சாலையில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் வாகன பார்கிங் செய்து தரவேண்டும். பாத்ரூம் வசதி இருக்க வேண்டும். ஓட்டுனர்களுக்கும், வாகனத்திற்கும், வாகனத்தில் இருக்கும் பொருள்களுக்கும் பாதுகாப்பு தரவேண்டும்.அங்கு காவலர் நியமிக்க வேண்டும்.

மக்களுக்காக பணியாற்றும் ஓட்டுநராகிய எங்களுக்கு தேர்தல் கமிஷன் ஆகிய தாங்கள் ஓட்டுநர்களுக்கு தபால் ஓட்டு அளிக்க வேண்டுகிறோம்.

ஆன்லைன் வாயிலாக வாகனங்கள் இல்லாமல் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்யும் பொழுது வாகனத்தினுடைய புகைப்படத்துடன் வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அனைத்தையும் ஒருமனதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு 2024 ஜனவரி 17ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பலவிதமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆட்சியாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு கோரிக்கை பதாகைகள் ஏந்தி போராட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் கலந்து கொண்டார்கள்.


Watch – YouTube Click

What do you think?

சிவகாசி அருகே பட்டாசு கழிவுகள் தீப்பற்றி எரிந்தது

கோலாகலமாக நடந்த அனிதா விஜயகுமார் மகள் திருமணம்…. என்னை அழைக்காதது ஏன்? குமுறிய Vanitha