in

ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு


Watch – YouTube Click

ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

 

ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு‌. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெல்லூர், கஸ்தம்பாடி, ஏரிகுப்பம், இலுப்பகுணம், சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் வெள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் கஜேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வின் போது உடன் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, தேமுதிக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் சேர்மன் செல்வம், போளூர் ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

காவல் துறையினர் தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்தனர்

அரியலூரில் தென்பட்ட சிறுத்தை மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தையா