in

கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் உருவம்

கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் உருவம்

 

மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரையில் செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்டுள்ளது……..

கார்த்திகை தீபத்தை ஒளிவூட்டும் மகா தீபக் கொப்பரை தயார் நிலையில்……
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் அதிகாலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலின் ஒன்றாம் பிரகாரம் அருகில் தீபமும் அன்று மாலை உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக பக்தர்கள் காத்திருக்கும் மலையே ஜோதி சொரூபமாக 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

முக்கிய நிகழ்வான கொப்பரை 5 அடி உயரமும் 8 அடி மேல் விட்டமும் சுமார் 5 அடி கீழ் விட்டமும் கொண்டு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட கொப்பரை நிலை நிறுத்தப்பட்டு சுமார் 4500 கிலோ நெய் 1500 மீட்டர் காடா துணி 25 கிலோ கற்பூரம் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் உலோகத்தினாலான கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் வரையப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அர்த்தநாரீஸ்வரர் செப்பினால் உருவம் செய்யப்பட்டு அதில் பதிக்கப்பட்டு இருப்பது பார்ப்பவர்களை மெய் சிலிக்க வைத்துள்ளது.

கொப்பரையில் மகா தீபம் ஏற்றும் போது சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்த்தால் கூட வானத்தில் அகல் விளக்கு எரிவது போல் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

காணொளி வாயிலாக திறந்த காய்கறி அங்காடி